நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Nov 2021 9:59 PM IST (Updated: 8 Nov 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டார்

கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டார். நேற்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலின்படி, கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளும், 88 ஆயிரத்து 616 ஆண் வாக்காளர்களும், 97 ஆயிரத்து 486 பெண் வாக்காளர்களும், இதர 18 நபர்களும் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். 191 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. குளித்தலை நகராட்சியில் 24 வார்டுகளும், 10 ஆயிரத்து 655 ஆண் வாக்காளர்களும், 11 ஆயிரத்து 857 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். 24 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளிலும் மொத்தம் 195 வார்டுகளும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 725 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 48 ஆயிரத்து 874 பெண் வாக்காளர்களும், இதர 20 நபர்களும் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர். 339 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

Next Story