பெதப்பம்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் அருகே சேறும், சகதியுமான சாலையால் விவசாயிகள் அவதி


பெதப்பம்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் அருகே சேறும், சகதியுமான சாலையால் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 8 Nov 2021 10:07 PM IST (Updated: 8 Nov 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

பெதப்பம்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் அருகே சேறும், சகதியுமான சாலையால் விவசாயிகள் அவதி

குடிமங்கலம், 
பெதப்பம்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் அருகே சேறும், சகதியுமான சாலையால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.
பி.ஏ.பி பாசனம்
குடிமங்கலம் ஒன்றியத்தில் பி.ஏ.பி. வாய்க்கால் பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
இப்பகுதிகளில் தற்போது மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 
உடுமலை-செஞ்சேரிமலை பிரதான சாலையில் இருந்து பொள்ளாச்சி- தாராபுரம் பிரதான சாலை வரை பூலாங்கிணறு கிளை வாய்க்கால் மூலம் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி. வாய்க்காலை ஒட்டிய சாலை மழைக் காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
சீரமைக்க கோரிக்கை
பெதப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை கொண்டு செல்வதற்கும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கும் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
 இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு கூட மிகவும் கடினமான சூழல் உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கிளை வாய்க்கால் ஒட்டிசெல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story