கொப்பரை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.


கொப்பரை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 8 Nov 2021 10:10 PM IST (Updated: 8 Nov 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

கொப்பரை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

காங்கேயம், 
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் களங்கள் உள்ளன. 
இந்த உலர் களங்களில் தேங்காய் உடைக்கப்பட்டு கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. காங்கேயம் சுற்றுப்பகுதியில் கடந்த 15 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பகல் நேரத்தில் மழை பொழிவு குறைந்து வெயில் அடித்ததால், கொப்பரை உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்வதாலும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாலும் கொப்பரை உற்பத்தி முழுமையாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொப்பரை உற்பத்தியாளர் தரப்பில் கூறியதாவது:-
கொப்பரை உற்பத்தி பாதிப்பு
காங்கேயம் தாலுகாவில் உள்ள உலர்களங்களுக்கு தினமும் சுமார் 500 லோடு தேங்காய் கொண்டு வரப்பட்டு கொப்பரை உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது பருவமழை தொடர்ந்து பெய்வதால், கொப்பரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்ட தேங்காய் பருப்பை உலர வைப்பதற்காக உலர்களத்தில் குவித்து தார்பாலின் கொண்டு மூடி வைத்துள்ளோம். 
இதனால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மழை நின்றால் தான் தொழில் சீரடையும் .
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story