பேரூர் பெரியகுளத்தில் மீட்பு ஒத்திகை
பேரூர் பெரியகுளத்தில் மீட்பு ஒத்திகை
கோவை
கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 10 பேர் நேற்று காலை கோவையை அடுத்த பேரூர் பெரியகுளத்தில் மீட்பு பணி ஒத்திகை நடத்தினர்.
குளத்தில் மூழ்கியவரை பரிசல் மற்றும் மிதவை உடை அணிந்து நீந்தி சென்று மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றை செய்து காட்டி செயல்விளக்கம் அளித்தனர்.
மழை, வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுங்களை தீயணைப்பு வீரர்கள் வினியோகம் செய்தனர்.
இது குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிச்சந்திரன் கூறும்போது, வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ள நீர்நிலைகளில் குளிப்பது, விளையாடு வது போன்றவற்றை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story