கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு


கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 8 Nov 2021 11:49 PM IST (Updated: 8 Nov 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் அவருடைய மனைவியும் இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் அவருடைய மனைவியும் இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தொழிலாளி சாவு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சி ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 61). மண்பாண்டம் செய்யும் தொழிலாளி. 

இவரது மனைவி கண்ணகி (55). இவர்களுக்கு பார்த்தீபன் (25) என்ற மகனும், மகாலட்சுமி (22) என்ற மகளும் உள்ளனர். பார்த்தீபன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகள் மகாலட்சுமி திருமணமாகி அரையாளம் கிராமத்தில் வசிக்கிறார்.

சேகருக்கு நேற்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணகிக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

சாவிலும் இணைபிரியாத தம்பதி

அதைத்தொடர்ந்து கண்ணகியையும் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார்.

 கணவர் இறந்த துக்கம்தாங்காமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனைவியும் இந்த சம்பவத்தால் உறவினர்கள் உள்பட கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story