தூண்டில் போட்டு மீன் பிடித்தவர் கால்வாயில் தவறி விழுந்து சாவு


தூண்டில் போட்டு  மீன் பிடித்தவர் கால்வாயில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:01 AM IST (Updated: 9 Nov 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

மீன் பிடித்தவர் கால்வாயில் தவறி விழுந்து சாவு

அணைக்கட்டு

பள்ளிகொண்டாவை அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 42), கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை அந்தப் பகுதியில் செதுவாலை ஏரிக்கு செல்லும் கால்வாயின் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். 
அப்போது அவர் கால் தவறி கால்வாய் தண்ணீரில் விழுந்து விட்டார். அவர், 500 மீட்டர் தூரத்துக்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து விட்டு அவரை கால்வாய் தண்ணீரில் இருந்து மீட்டனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, அவரின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story