வாணியம்பாடி அருகே லாரியில் கடத்தப்பட்ட 420 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


வாணியம்பாடி அருகே லாரியில் கடத்தப்பட்ட 420 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Nov 2021 12:02 AM IST (Updated: 9 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே லாரியில் கடத்தப்பட்ட 420 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே லாரியில் கடத்தப்பட்ட 420 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் அரிசி கடத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து தொடர்ந்து கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களுக்கு ெரயில்கள், லாரிகள் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக, மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை சென்னை கோட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்திரவின் பேரில், வேலூர் குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சிறப்பு அதிரடி குழுவினர் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதியிலும் மற்றும் ெரயில் நிலைய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். 

அப்போது வாணியம்பாடியில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல்  கிடைத்தது. அதைத்தொடர்ந்து நெக்குந்தி டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

420 மூட்டை பறிமுதல்

அந்த வழியாக  வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனைசெய்ததில் அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் இருந்தவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் காஞ்சீபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பவர் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

லாரியில் 420 மூட்டைகளில் 21,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் குடிமை பொருள் குற்றபுலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Next Story