சிறை அதிகாரிகள், கைதிகளை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். ஆந்திர மாநில சிறைத்துறை டி.ஜி.பி. பேச்சு
சிறை அதிகாரிகள், கைதிகளை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையம் (ஆப்கா) அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பிரிவுகளில் சிறை அலுவலர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கான பயிற்சி நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா நேற்று ஆப்காவில் நடைபெற்றது. ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பியூலா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில சிறைத்துறை டி.ஜி.பி. முகமத்அசேன்ரேசா கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், ஆப்காவில் வழங்கப்படும் பயிற்சி தேசிய அளவிலான தரத்தில் உள்ளது. இங்கு சிறை அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், மனநல அலுவலர்கள் ஆகியோர் ஒன்றாக பயிற்சி பெறுகின்றனர்.இதனால் அனைத்து துறை ரீதியான விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். ஆந்திராவில் நன்னடத்தை அடிப்படையில் 460 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீண்டும் குற்றம் செய்து விட்டு சிறைக்கு வரவில்லை. எனவே சிறை அலுவலர்கள் கைதிகளை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். சிறைச்சாலை என்று கூறுவதற்கு பதில் சீர்திருத்த மையம் என்று அழைக்கலாம். விடுதலையாகும் கைதிகள் குற்றம் செய்யாமல் சுயதொழில் செய்யும் வகையில் மாற்றம் வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சிறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story