சேத்தூர், தேவதானம் பகுதிகளில் கனமழை பெய்தது.


சேத்தூர், தேவதானம் பகுதிகளில் கனமழை பெய்தது.
x
தினத்தந்தி 9 Nov 2021 12:34 AM IST (Updated: 9 Nov 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

மழை

தளவாய்புரம், 
சேத்தூர், தேவதானம் பகுதிகளில் நேற்று மாலையில்  வானில் கருமேகங்கள் திரண்டு வந்தன. பின்னர் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. சில மணி நேரம் மழை விட்டு விட்டு பெய்தது. இதனைத்தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். 

Related Tags :
Next Story