போராட்டம்
சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போராட்டம்
விருதுநகர்,
விருதுநகர் அய்யனார்நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அருப்புக்கோட்டை சவுண்டம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் குடியேற சென்றபோது சக்திவேலையும், அவரது மனைவியையும் சிலர் தாக்கியதாக கூறி அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். ஆனாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முறையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நிலையிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இதுபற்றிய அறிவிப்பு பலகையோடு சக்திவேல் போராட்டத்தில் ஈடுபட்டார். அதில், போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டும் தனது மனு மீது நடவடிக்கை எடுக்காத அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சக்திவேலுவிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டார்.
Related Tags :
Next Story