12 இடங்களில் பயிர் கடன் வழங்கும் முகாம்


12 இடங்களில் பயிர் கடன் வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 9 Nov 2021 12:51 AM IST (Updated: 9 Nov 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 11-ந்தேதி வரை விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை,
"
சிவகங்கை மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 11-ந்தேதி வரை விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

பயிர்கடன்

இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு பருவத்தில் எளிதில் பயிர் கடன் பெற்றிட அனைத்து வங்கிகள், கூட்டுறவுத்துறை சார்பில் பயிர்க்கடன் வழங்கும் முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 11-ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. வேளாண்மை மற்றும் முன்னோடி வங்கியின் ஒருங்கிணைப்பில் சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும், கூட்டுறவுத் துறையும் இந்த முகாமில் பங்கேற்க உள்ளது.

12 இடங்களில்

திருப்பத்தூர், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சாக்கோட்டை, சிங்கம்புணரி, கல்லல் ஆகிய 7 ஊர்களில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், கண்ணங்குடி, தேவகோட்டை, இளையான்குடி, மற்றும் திருப்புவனம் ஆகிய 4 இடங்களில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும். எஸ்.புதூரில் சமுதாயக்கூடத்திலும் இந்த முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளால் பரிசீலிக்கப்பட்டு விதிமுறைகள் மற்றும் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும். இம்முகாமில் வங்கிகள் அல்லது கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக ஏற்கனவே பயிர் கடன் பெறாத விவசாயிகள் பங்கு பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்

பயிர் கடனுக்கு விண்ணப்பிக்க வருபவர்கள் வங்கி கணக்கின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story