பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர் கைது
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் மேட்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் மோகனராம் (வயது 27). இவர் ஆச்சிமடம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்தபோது, முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த கணபதி என்ற கணேசன் (23), பாலகிருஷ்ணன் (27) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணபதி, பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் மோகனராமை அவதூறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story