சுரண்டையில் பரபரப்பு காய்கறி வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 3 பேர் கைது
சுரண்டையில் காய்கறி வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (வயது 29). இவர் சுரண்டை காய்கறி மார்க்கெட்டில் கமிஷன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனர். இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு, விஜயகுமார் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார்.
பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பிடித்தது
அப்போது காம்பவுண்டு சுவர் அருகில் உள்ள மின்மோட்டார் மீது பெட்ேரால் குண்டு விழுந்து வெடித்ததில் அது தீப்பிடித்து எரிந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
இதுகுறித்து சுரண்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில், காய்கறி வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது கழுநீர்குளத்தைச் சேர்ந்த அரியநாயகம் மகன் மதன்குமார் (25), அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கிருஷ்ணகுமார் (28), சென்னையைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் கார்த்திக் (35) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வியாபாரி விஜயகுமாரின் சகோதரர் விவேக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த விரோதத்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 ேபரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story