செல்போன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2021 1:02 AM IST (Updated: 9 Nov 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே செல்போன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே செல்போன் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செல்போன் கடைக்காரர்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெற்கு நெல்லையப்பபுரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான் (வயது 60). இவரது மனைவி நாச்சியார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இவர்களில் கடைசி மகன் வெட்டும்பெருமாள் (24). இவர் மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் வெட்டும் பெருமாளுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் குடும்பத்தினர் வெட்டும்பெருமாளுக்கு ரெட்டியார்பட்டி பகுதியில் பெண் பார்த்து பூ வைத்து விட்டு வந்துள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் முடிவான நிலையில் நேற்று காலை வழக்கம் போல கடைக்கு செல்வதற்காக குளித்துவிட்டு உடை மாற்ற தனது அறைக்குச் சென்ற வெட்டும்பெருமாள் உள்பக்கமாக கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் மகன் வெளியே வராததை கண்டு சங்கிலி பூதத்தான் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்தார். அங்கு வெட்டும் பெருமாள் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் கடைக்காரர் திருமணம் முடிவான நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story