மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நேற்று மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் தொடர் மழையையொட்டி சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் சாக்கடை தண்ணீரும் அதில் கலந்து சுகாதார சீர்கேட்டுடன் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் வெயில் காலங்களிலும் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. எனவே தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story