மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை சாவு


மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை சாவு
x
தினத்தந்தி 9 Nov 2021 2:02 AM IST (Updated: 9 Nov 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

கருங்கல், 
கருங்கல் அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுமாப்பிள்ளை 
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி ஆத்திவிளையை சேர்ந்த மோசஸ் மகன் அருள்மணி (வயது30), எலக்ட்ரீசியன். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
இந்தநிலையில் அருள்மணி நேற்று பூட்டேற்றி பரமகோணம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் வேலைக்கு சென்றார். அவருடன் வேறு சில தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலை நேரத்தில் பணியின் போது எதிர்பாராதவிதமாக அருள்மணி மீது மின்சாரம் பாய்ந்தது. இவர் அவர் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அருள்மணி இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். கணவரின் உடலை பார்த்து மனைவி அழுதது காண்பவர் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 6 மாதத்தில் எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story