மதுராந்தகம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி


மதுராந்தகம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 9 Nov 2021 11:28 AM IST (Updated: 9 Nov 2021 11:37 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே லாரி மோதியதில் மின்வாரிய ஊழியர் பலியானார்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). இவர் சென்னை கே.கே.நகரில் உள்ள மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியின் காரணமாக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்ற போது, நல்லாமூர் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ருக்மாங்கதன் பலியான ராஜேஷின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரிடம் சித்தாமூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story