ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்


ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்
x
தினத்தந்தி 9 Nov 2021 2:23 PM IST (Updated: 9 Nov 2021 2:23 PM IST)
t-max-icont-min-icon

ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் நியூ காலனி மெயின் ரோட்டில் இயங்கி வந்தது. ஆதம்பாக்கம் நியூ காலனி 2-வது தெருவில் முதல் தளத்துக்கு போலீஸ் நிலையம் தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டது.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் நியூ காலனி மெயின் ரோட்டில் இயங்கி வந்தது. சாலையை விட போலீஸ் நிலையம் தாழ்வாக இருந்ததால் மழை காலங்களில் போலீஸ் நிலையத்துக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும். மோட்டார் பம்பு மூலம் தண்ணீர் அகற்றப்படும்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் மழையால் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் மழைநீர் புகுந்து விட்டது. இதனால் மோட்டார் பம்பு மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் தொடர் மழையால் போலீஸ் நிலையத்தில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டதால் ஆதம்பாக்கம் நியூ காலனி 2-வது தெருவில் முதல் தளத்துக்கு போலீஸ் நிலையம் தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டது.


Next Story