மழையால் 2 சதவீதம் சேவை பாதிப்பு: பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர்


மழையால் 2 சதவீதம் சேவை பாதிப்பு: பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர்
x
தினத்தந்தி 9 Nov 2021 2:32 PM IST (Updated: 9 Nov 2021 2:32 PM IST)
t-max-icont-min-icon

2 சதவீதத்துக்கு கீழ் மட்டுமே, பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை பொதுமேலாளர் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் கனமழை அதிகரித்தது. இதனால், அடையாறு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மழைநீர் புகுந்தது. உடனடியாக மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டு, சேவை வழங்கப்பட்டது. ஆனால், வேறெங்கும் சேவை பாதிக்கப்படவில்லை. இதே போல சேவை தொடர்ந்து வழங்க, சென்னை வட்டத்தின் கீழ் உள்ள 380 சிக்னல் கோபுரங்களில், இரண்டு பேட்டரிகள் செயல்பாட்டில் உள்ளன. இதனால், மின்சேவை துண்டிக்கும் போது, செல்போன் இணைப்பு சேவையில் பாதிப்பு ஏற்படாது. இதே போல பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில் 2 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை, 2 சதவீதத்துக்கு கீழ் மட்டுமே, சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வட்டத்தின் கீழ் ஏற்படும் சேவை பாதிப்பை, கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சேவை துண்டிப்பு ஏற்பட்டதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் வி.கே.சஞ்சீவி தெரிவித்து உள்ளார்.


Next Story