சாலையில் குழி


சாலையில் குழி
x
தினத்தந்தி 9 Nov 2021 5:30 PM IST (Updated: 9 Nov 2021 5:30 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் குழி

தினத்தந்தி புகார் பெட்டி பாக்ஸ் வைக்க வேண்டும்
----
சாலையில் குழி
வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய குழி உள்ளது. இந்த குழியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த குழியை மூட வேண்டும்.
பாலா,வெள்ளகோவில் 
சாக்கடை வசதி 
திருப்பூர் மாநகராட்சியின் பிரதான சாலையான குமரன் ரோடு அருகில் உள்ள சபரிசாலையில் இதுவரை சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மீனாட்சி சுந்தரம்,திருப்பூர்
----
மேம்பாலம் கட்ட வேண்டும்
திருப்பூரில் குறைந்த  அளவு மழை பெய்தால் கூட, திருப்பூர்-ஊத்துக்குளி சாலை முதல் ரெயில்வே கேட் அருகில் உள்ள ஒன்றைக்கண் பாலத்தின் கீழ் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த சாலையில் இரு சக்கர வாகனத்தின் சக்கரம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் வருகிறது. இதனால் அந்த சாலையில் மழை பெய்யும்போது எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தண்ணீருக்குள் வாகனம் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் குழந்தைகளுடன் பெண்கள் அந்த சாக்கடை நீர் கலந்த மழை நீரில் உடைகள் நனைந்தபடி நடந்து செல்கிறார்கள்.  சாக்கடை நீரினால் சொறி சிரங்கு ஏற்படுகிறது. 
திருப்பூரை பொருத்தவரை தேவையில்லாத இடங்களில் பாலத்தை கட்டி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து விட்டார்கள். தேவையான இடத்தில் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே மக்களின் நலன்கருதி திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் டி.எம்.எப். மருத்துவமனை முதல் 2-வது  ரெயில்வேகேட் வரை மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.சந்திரசேகர், திருப்பூர்.
--
நாய்கள் தொந்தரவு
திருப்பூரில் சந்துகள் இருக்கும் இடமெல்லாம் நாய்கள் கூட்டம் இருக்கும். இவை சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை கிளறி போட்டு விட்டு குறுக்கும், நெடுக்குமாக ஓடுகிறது. அப்போது இருசக்கர வாகனங்களில் மோதுவதால் விபத்து ஏற்படுகிறது.
 மேலும் தனியாக செல்வோரை கடித்து குதறுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெண் குழந்தைகள் தனியாக சைக்கிளில் சென்று வரவேண்டி உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
கே.சரண்,மண்ணரை
--------------
சுகாதார சீர்கேடு (படம் உண்டு)
உடுமலை நகராட்சி  14-வது வார்டு பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், ஈ, கொசு தொல்லை அதிகரித்து விட்டது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். 
எனவே பொதுமக்கள் நலன்கருதி குப்பைகளை அள்ள உடுமலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மா.நடராஜன்,உடுமலை
---

Next Story