கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், ஊழியர் சங்க கிளை தலைவர் மகேந்திர மணி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே. சுப்பையா, கிளை துணை செயலாளர் எம். பரமசிவம், அதிகாரிகள் சங்க கிளை செயலாளர் கே. கோலப்பன், கிளைச் செயலாளர் பி.முத்துராமன், கிளை பொருளாளர் கே. திருவட்ட போத்தி மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தரமான 4 ஜி உபகரணங்கள் வழங்க வேண்டும், தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் அரசு துறை மற்றும் பொதுத் துறை சொத்துக்களை அந்நிய, இந்திய கார்பரேட் நிறுவனங் களுக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும். பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனத்தின் செல்போன் டவர்கள், ஆப்டிக்கல் கேபிள்களை தனியாருக்கு வழங்கக் கூடாது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை சேவைக்கு தரமான உபகரணங்களை வழங்க அனுமதி கொடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய, ஓய்வூதிய பங்களிப்பில் மிகுதியாக பிடிக்கப்பட்ட தொகையான ரூ.39 ஆயிரம் கோடியை உடனடியாக, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story