ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி


ஆர்ப்பரித்து கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி
x
தினத்தந்தி 9 Nov 2021 6:48 PM IST (Updated: 9 Nov 2021 6:48 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை பகுதியில் பெய்த கனமழை எதிரொலியாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் அருவி உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
 
அந்த வகையில், பெரும்பாறை அருகே இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அந்த தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அணை நிரம்பி வழிகிறது.

 இதற்கிடையே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தாண்டிக்குடி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story