புற்றுநோயால் இறந்த மோப்பநாய்க்கு அஞ்சலி


புற்றுநோயால் இறந்த மோப்பநாய்க்கு அஞ்சலி
x
தினத்தந்தி 9 Nov 2021 6:52 PM IST (Updated: 9 Nov 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க புற்றுநோயால் இறந்த மோப்பநாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் மோப்பநாய் பிரிவு செயல்படுகிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்க தனித்தனியாக 2 மோப்பநாய்கள் உள்ளன. இதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கண்டுபிடிக்க 2 வயதான ரூனி எனும் மோப்பநாய் உள்ளது. இந்த மோப்பநாய்க்கு கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பொருட்களை கண்டுபிடிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மோப்பநாய் ரூனியின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்த போது மோப்பநாயின் நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோப்பநாய்க்கு நாமக்கல்லில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மோப்பநாய் ரூனி இறந்தது. இதைத்தொடர்ந்து சீலப்பாடி மைதானத்துக்கு மோப்பநாயின் உடல் கொண்டு வரப்பட்டது.

அங்கு மோப்பநாயின் உடலுக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மோப்பநாய் ரூனிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் ஆயுதப்படை வளாகத்தில் மோப்பநாயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story