குடகனாறு அணையை கலெக்டர் ஆய்வு
வேடசந்தூர் அருகே குடகனாறு அணையை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.
வேடசந்தூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதன் எதிரொலியாக, வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி 27 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 16 அடியை எட்டியுள்ளது.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், அழகாபுரி குடகனாறு அணைக்கு நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக வேடசந்தூர் அருகே குடகனாற்றின் குறுக்கே உள்ள லட்சுமணம்பட்டி தடுப்பணையையும் கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story