மலைச்சாலையில் கிடக்கும் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம்


மலைச்சாலையில் கிடக்கும் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 9 Nov 2021 7:36 PM IST (Updated: 9 Nov 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

மலைச்சாலையில் கிடக்கும் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைச் சாலையில் கிடக்கும் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதனால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 


14 கொண்டை ஊசி வளைவுகள் 


குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் கல்லார் முதல் காட்டேரி வரை அபாயகரமான 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இது மட்டுமின்றி குறுகிய மறைமுக வளைவுகள் சாலையில் உள்ளன. இந்த சாலை குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் வாகனங்கள் போக்குவரத்து விதியை கடைபிடித்து மெதுவாக செல்ல போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அபாயகரமான பகுதிகளில் நெடுஞ்சாலை துறை மூலம் எச்சரிக்கை பலகைகள் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. குறுகிய சாலையினால் அடிக்கடி வாகன போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. 

விபத்து ஏற்படும் அபாயம்

இதனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வாய்ப்பு உள்ள இடங்களில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டனர். குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் 14 இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியினால் கற்கள் சாலையின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பர்லியார், கே.என்.ஆர்.நகர் இடையே சாலையின் ஓரத்தில் கற்கள் அதிகமாக இருப்பதால் ஒரு புறம் மட்டுமே வாகனம் செல்லும் நிலை உள்ளது. தற்போது மழையின் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. 
இதனால் சாலை ஓரத்தில் கற்கள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. இதன் காரணமாக விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரத்தில் உள்ள கற்களுக்கு வர்ணம் பூசுவதோடு, விரைவில் சாலையிலிருந்து கற்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story