தடுப்புச்சுவர் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு


தடுப்புச்சுவர் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 8:03 PM IST (Updated: 9 Nov 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

தடுப்புச்சுவர் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

கூடலூர்

கூடலூர் அருகே சாலையோரம் இரும்பு கம்பிகள் இல்லாமல் தடுப்பு சுவர் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தடுப்பு சுவர் கட்டும் பணி

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் பெரியசோலை, பார்வுட், சூண்டி, ஆரோட்டுப்பாறை உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழையால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கும் அபாயம் உள்ள இடங்களில் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பெரிய சூண்டியில் இருந்து சின்ன சூண்டிக்கு செல்லும் சாலையோரம் மழை வெள்ள பாதிப்பு இல்லாத இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் ஜல்லி கற்கள், சிமெண்டு கலவைகள் மட்டுமே கொண்டு தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. ஆனால் இரும்பு கம்பிகள் கட்டப்படவில்லை. இதனால் தடுப்புச்சுவர் பலமின்றி சில ஆண்டுகளில் உடைந்து விழும் நிலை ஏற்படும். இதனால் கிராம மக்கள் தடுப்புச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். 

இரும்பு கம்பிகள் இல்லாமல்

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
பேரூராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர், சுண்ணாம்பு பாலம் உள்ளிட்ட சில இடங்களில் மழையால் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கும் நிலையில் உள்ளது. சேதமடைந்த பகுதிகளில் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும் என 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரப்படுகிறது. ஆனால் சேதமடைந்த இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை.
ஆனால் பெரிய சுவடியிலிருந்து சின்ன சுண்டெக்கு செல்லும் சாலையோரம் சில மீட்டர் தூரம் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இரும்பு கம்பிகள் பொருத்தப்படவில்லை. இதுகுறித்து துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கவில்லை. சிமெண்டு கலவை மூலம் தடுப்பு சுவர் கட்டுவதால் எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story