தேனி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை


தேனி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 9 Nov 2021 8:35 PM IST (Updated: 9 Nov 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.

தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 521 பேர் பலியாகினர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. நேற்று மொத்தம் 915 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நாளாக அமைந்தது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மட்டும் தான் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதுபோல், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் நேற்று குணமடைந்தார். 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story