கயத்தாறு திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது
கயத்தாறு திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது
கயத்தாறு:
கயத்தாறு திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையும், மாலையும் 4 கால பூஜை நடைபெற்றது. 6-வது நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்வதற்கு முன்பு நரகாசுரனை வீரபாகு வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. பின்னர் முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முருகனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story