கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சண்முக அர்ச்சனை மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு கோவில் மேல வாசலில் உள்பிரகாரத்தில் மயில் வாகனத்தில் கழுகாசலமூர்த்தி எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து பானுகோபன், யானை முகன், சிங்கமுகன், தர்ம கோபன், சூரபத்மன் ஆகியோரை, கழுகாசலமூர்த்தி வதம் செய்து சூரசம்காரம் நடைபெற்றது. வருகிற 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு கழுகாசலமூர்த்தி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வருகிற 14-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி, சபாபதி, பத்மாவதி, முத்து மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அரசு விதிகளின்படி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் எளிமையான முறையில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது.
Related Tags :
Next Story