நிரம்பி வழிந்த கடுவனூர் ஏரி தண்ணீரில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்


நிரம்பி வழிந்த கடுவனூர் ஏரி தண்ணீரில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்
x
தினத்தந்தி 9 Nov 2021 10:33 PM IST (Updated: 9 Nov 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

நிரம்பி வழிந்த கடுவனூர் ஏரி தண்ணீரில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன் பிடித்தனர்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைப் பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அவை படிப்படியாக நிரம்பி வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. அந்தவகையில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூர் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து உபரி நீர் வெளியேறி வருகிறது. 

மேலும் இப்பகுதியில் உள்ள ஏரிகளில் கடந்த 2 வருடங்களாக மீன் வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் மீன்களை பிடிக்க முடியாமல் குத்தகைதாரர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மீன்களும் வெளியேறி வருகின்றன. இதை அறிந்த கிராம மக்கள் வலை மற்றும் தூண்டில்கள் மூலம் மீன்களை போட்டிபோட்டு பிடித்து செல்கின்றனர். அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story