கந்தசஷ்டி விழாவையொட்டி மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மயிலம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலம்,
கந்த சஷ்டி விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் மயில் வடிவ மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன் திருமண கோலத்தில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். மேலும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர் மற்றும் மூலவரான வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைநடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பலவகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 26 வகையான தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
அதன்பிறகு இரவு 7 மணியளவில் முருகன் சக்தியிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதல் 3 பிரகாரத்தை வள்ளி, தெய்வானையுடன் முருகன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீன 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலைய சுவாமிகள் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story