சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.
சேறும், சகதியுமான சாலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள திருவண்ணாமலை டவுன் கிராம நிர்வாக அலுவலகம், கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகங்கள் முன்பு உள்ள சாலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் சேறும், சகதியுமாக மக்கள் நடமாட முடியாத அளவிற்கு உள்ளது.
இதனால் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் சாலையை சரி செய்ய கோரி பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
நாற்று நடும் போராட்டம்
இந்த நிலையில் சேறும், சகதியுமாக உள்ள அந்த சாலையை சரி செய்யக்கோரி திருவண்ணாமலை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
போராட்டத்திற்கு நகர செயலாளர் பிரகலநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்ரன் நாற்று நடும் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
கட்சி நிர்வாகிகள் சகதியாக உள்ள இடங்களில் நாற்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், செல்வி, தமிழ்ச்செல்வி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story