சுற்றுச்சுவர் இடிந்து விவசாய நிலத்தில் விழுந்தது
செங்கம் அருகே ஆவின் பால் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விவசாய நிலத்தில் விழுந்தது.
செங்கம்
செங்கம் அருகே ஆவின் பால் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விவசாய நிலத்தில் விழுந்தது.
செங்கம் அருகே அம்மாபாளையத்தில் ஆவின் பால் பவுடர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சுவரில் ஒரு பகுதி இடிந்து நெல் பயிரிடப்பட்டு உள்ள விவசாய நிலத்தில் விழுந்தது. இதில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. மேலும் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை பால் பவுடர் தொழிற்சாலை நிர்வாகம் அகற்றவில்லை.
நிலத்தில் விழுந்த சுற்றுச்சுவரை அகற்ற ஆவின் தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story