ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 1-வது பிளாட்பாரத்தின் அருகில் உள்ள புதர்களின் மறைவில் சிறு, சிறு மூட்டைகளாக ஆங்காங்கே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை பார்த்தனர். அங்கிருந்த 700 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ரெயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story