டாஸ்மாக் விற்பனையாளரிடம் செல்போன் பறிப்பு


டாஸ்மாக் விற்பனையாளரிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2021 12:02 AM IST (Updated: 10 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் விற்பனையாளரிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வள்ளியூர்:

தெற்கு வள்ளியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 44). இவர் வள்ளியூர்-ஏர்வாடி மெயின்ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வள்ளியூர் நம்பியான்விளை பைபாஸ் ரோட்டருகே சென்றபோது பின்னால் வேகமாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்து வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி சங்கரலிங்கத்தை மிரட்டி செல்போன் மற்றும் கையில் வைத்திருந்த பையையும் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story