சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2021 12:37 AM IST (Updated: 10 Nov 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை,

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

 முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுத்த தமிழக அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் கருணாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், சோழன் பழனிச்சாமி, கற்பகம் இளங்கோ, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஆவின் தலைவர் அசோகன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோவன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.எம்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, பாம்கோ தலைவர் ஏ.வி. நாகராஜன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பில்லூர் ராமசாமி, கோமதி தேவராஜ், பாக்கியலட்சுமி அழகுமலை, மாரிமுத்து, மகேஸ்வரி செல்வராஜ், சிவகங்கை நகரசபை முன்னாள் தலைவர் அர்ஜீனன், மற்றும் நகர் ஒன்றிய கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையைப் பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தண்ணீர் திறக்கும் உரிமையை பறிக்கொடுத்த தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story