முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா
திருவெறும்பூர்,நவ.10-
திருவெறும்பூர் திருநெடுங்களநாதர் கோவிலில் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் உப்பிலியபுரம் நித்தியகல்யாணி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியசுவாமி சன்னதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. சுப்ரமணியசுவாமி, சிவன் சன்னதியிலிருந்து புறப்பட்டு, குதிரை வாகனத்தில் உப்பிலியபுரம் பிரதான சாலைகளில் வலம் வந்து, மாரியம்மன் திடலில் சிங்க முக மகாசூரனை வதம் செய்தார். இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருச்சி சுந்தர்நகரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டியையொட்டி நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பலத்த மழை பெய்ததால் இதில் குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story