மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2021 1:10 AM IST (Updated: 10 Nov 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகிய மணவாளன் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ஜெயசந்திரன்(வயது 30).   இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஏற்கனவே ஜெயசந்திரனின் பெற்றோர் இறந்துவிட்டனர். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 5-ந் தேதி புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதையடுத்து மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ஜெயசந்திரன் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை தொடர்ந்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story