கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, தள்ளுபடி செய்ததற்கான சான்றுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோரிடம் அளித்தனர்.
Related Tags :
Next Story