கரூரை சேர்ந்த சுப்புராமனுக்கு பத்மஸ்ரீ விருது
சமுதாய பணிகளை திறம்பட மேற்கொண்ட கரூரை சேர்ந்த சுப்புராமனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கரூா்,
கரூர் மாவட்டம் புதுப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 73). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், தன் குடும்பத்தில் முதல் பட்டதாரியாவார். சமூக அமைப்பு மற்றும் மக்கள் கல்விக்கான சமூகம் (ஸ்கோப்) என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 1996-ம் ஆண்டு இவர் தொடங்கினார். திருச்சி மாவட்டம் முசிறி காளியார்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் திறந்தவெளியில் மக்கள் மலம் கழிப்பதை தடுக்க இவர் பெரும் முயற்சி மேற்கொண்டார். முசிறி காளியார் தெருவில் சமுதாய கழிப்பறைகளை கட்டி, பொதுமக்கள் கழிப்பறைக்கு வருவதற்கு காசு கொடுத்து ஊக்கப்படுத்தினார். கழிப்பறையில் தனி குழாய்கள் அமைத்து சிறுநீரை தண்ணீருடன் கலந்து வயல்களுக்கு பாய்ச்சுவது, அனைவரும் குறைந்த செலவில் கழிப்பறைகளை கட்டி பயன்படுத்துவது, பாதுகாப்பான குடிநீர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சத்துணவு என பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமுதாய பணிகளை திறம்பட மேற்கொண்ட சுப்புராமனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது. அந்த விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் நேற்று சுப்புராமன் பெற்றுக்கொண்டார்.
Related Tags :
Next Story