சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்
எடப்பாடி, நவ.10-
எடப்பாடி அருகே சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சேறும்-சகதியுமான சாலை
எடப்பாடி அருகே சித்தூரில் உள்ள கூழையனூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
நாற்று நட்டு போராட்டம்
எனவே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் பலர் நேற்று சேறும்-சகதியுமாக காணப்பட்ட ரோட்டில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, இந்த மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சாலை சேறும்-சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மழைநீரில் நடந்த செல்ல வேண்டி உள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கிராம மக்கள் போராட்டம் நடத்திய போதும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், அவர்கள் சிறிது நேரத்துக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story