ரெயிலின் இருக்கைக்கு அடியில் இருந்து 165 மதுபாட்டில்கள் பறிமுதல்
காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் சென்ற ரெயிலின் இருக்கைக்கு அடியில் இருந்து 165 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை பார்த்ததும் கடத்தல் ஆசாமி தப்பியோடி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
தஞ்சாவூர்;
காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் சென்ற ரெயிலின் இருக்கைக்கு அடியில் இருந்து 165 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை பார்த்ததும் கடத்தல் ஆசாமி தப்பியோடி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
ரெயிலில் சோதனை
காரைக்காலில் இருந்து செல்லும் ரெயில்களில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திச்செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் மண்டல கமிஷனர் ராமகிருஷ்ணன், துணை கமிஷனர் சின்னதுரை ஆகியோர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், இசக்கிராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் சென்ற ரெயிலில் அவர்கள் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலில் ஒரு பெட்டியில் இருக்கைக்கு அடியில் மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு 2-வது நடைமேடைக்கு வந்து நின்றது.
165 மதுபாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து போலீசார் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று, உரிமை கோரப்படாமல் இருந்த 165 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 410 ஆகும். மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர், போலீசார் சோதனை நடத்துவதை அறிந்து அப்படியே போட்டு விட்டு தப்பியோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story