தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Nov 2021 2:43 AM IST (Updated: 10 Nov 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் ஒரு தனியார் தட்டச்சு பள்ளி அருகில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரைக்கற்கள் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                  -அரவிந்த், கிருஷ்ணன்கோவில்.
எரியாத விளக்குகள்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நன்றிகுழி, மணத்திட்டை, காயிதேமில்லத் நகர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால் எரியாமல் உள்ளது. இதனால், இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரம் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                           
-சமியன்பிள்ளை, காயிதேமில்லத்நகர்
தேங்கி கிடக்கும் குப்பைகள்
மூலச்சலில் இருந்து தக்கலை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் விலவூர் பேரூராட்சி முடிந்து, பத்மநாபபுரம் பேரூராட்சி எல்லை தொடங்கும் மணலி பகுதியில் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அவற்றை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக அகற்றுவதில்லை. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
                                   -பென்சமின் பென்னி, மணலி.
வடிகால் ஓடை தேவை
 மேடவிளாகத்தில் இருந்து சூசைபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில்  ஆண்ட்ரூஸ் லன் தெருவில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதி மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                     -ஷிபு ஜோ, கொல்லங்கோடு.
சாலையை சீரமைக்க வேண்டும்
வெள்ளமடம் கிறிஸ்துநகரில் ஈஸ்வர் காலனி உள்ளது. இந்த காலனியில் தெற்கு தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தார்சாலை என்பதற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளதால் பள்ளி வாகனங்கள் உள்ளே வருதில்லை. இதனால், மாணவ,மாணவிகள் சந்திப்பு பகுதி வரை நடந்து வந்து பள்ளி வாகனத்தில் செல்வதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                    -த.பிரேம்குமார், கிறிஸ்துநகர். 
சாலையில் மரண பள்ளங்கள்
நாகர்கோவில் சவேரியார்கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம்  செல்லும் சாலை, பறக்கை விளக்கு செல்லும் சாலைகள் தற்போது பெய்த மழையால் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சாலைகளில் பெரிய மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்.
                           -சித்தார்த்தன், வடக்கு தாமரைகுளம்.
விபத்து அபாயம்
காரங்காட்டில் இருந்து வெட்டுவிளை சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
                                -பெலிக்ஸ் ராஜன், காரங்காடு.


Next Story