முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி
குமரிமாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில்கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆரல்வாய்மொழி,
குமரிமாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில்கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூரசம்ஹாரம்
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பாலமுருகன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். பின்னர் சுப்பிரமணியபுரத்தில் இருந்து ஆரல்வாய்மொழி சந்திப்பு வரை சூரன் முன்னே செல்ல, பாலமுருகன் வாகனத்தில் பின்னால் சென்றார். மீண்டும் அங்கிருந்து சுப்பிரமணியபுரம் வந்ததும் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் சூரனை பாலமுருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. இரவில் பாலமுருகனுக்கு அபிஷேகமும், சுவாமி மயில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தோவாளை கோவில்
இதேபோல் தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அப்போது செக்கர் கிரி சுவாமி, சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சூரன் புறப்பாடும் நடந்தது.
சுப்பிரமணியசாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சூரனை பின்னால் துரத்தி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் சூரனை வதம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இரவு சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மயில் வாகனத்தில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை விழாக் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக கந்தசஷ்டியையொட்டி 4-ந் தேதி முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து மாற்றம்
இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், குமாரகோவில், வெள்ளிமலை கோவில், மருங்கூர், முருகன்குன்றம், பெருவிளை தெய்வி முருகன் கோவில் ஆரல்வாய்மொழி வடக்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சுப்பிரமணியசாமி கோவிலிலும், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி தோவாளை, ஆரல்வாய்மொழி பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story