பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது


பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2021 3:06 AM IST (Updated: 10 Nov 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பெண் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் பெண் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
பெண் கொலை 
ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவை சேர்ந்த கணேசன். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இந்திராணி (வயது 40). இந்தநிலையில் இந்திராணி கடையில் தனியாக இருந்தார். அப்போது ஒரு நபர் பெட்டி கடைக்குள் நுழைந்து இந்திராணியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். 
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். விசாரணையில் துரைச்சாமியாபுரம் தெருவை சேர்ந்த பரமசிவம் (46), என்பவருக்கும் இந்திராணிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
2 பேர் கைது 
அதனை பயன்படுத்தி அடிக்கடி இந்திராணியை பரமசிவம் மிரட்டியுள்ளார். இதனால் இந்திராணியின் கணவர் கணேசன் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம் இந்திராணி மீது கோபத்தில் இருந்ததாகவும். அதற்கு பழிவாங்கும் விதமாக கடையில் தனியாக இருந்த இந்திராணியை, அவரது நண்பர் அழகுராஜாவுடன்(30) சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ததும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.
 இதனை தொடர்ந்து பரமசிவம், அழகுராஜா ஆகிய 2 பேரை தெற்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story