6-வது மைல் நீர்த்தேக்கத்தை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
ராஜபாளையம் அருகே 6-வது மைல் நீர்த்தேக்கத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து 6-வது மைல் நீர்த்தேக்க நிலையத்திற்கும் மற்றும் அய்யனார் கோவில் அருவியிலிருந்து நீர்தேக்க நிலையத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- நீர்த்தேக்க நிலையங்களில் மொத்த கொள்ளளவை எட்டும் வரை நீரை தேக்கிவைத்து குடிநீருடன் போர் தண்ணீர் கலக்காமல் முழுவதுமாக அய்யனார் கோவில் அருவித்தண்ணீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் சுந்தரம்பாள், பொறியாளர் ராமலிங்கம், நகரமைப்பு அலுவலர் மதியழகன், தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கட்சி நிர்வாகிகள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story