விருதுநகரில் இருந்து காரைக்குடி வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்


விருதுநகரில் இருந்து காரைக்குடி வரை  சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்
x
தினத்தந்தி 10 Nov 2021 3:41 AM IST (Updated: 10 Nov 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் இருந்து காரைக்குடி வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகரில் இருந்து காரைக்குடி வரையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்06886) இன்று முதல் இயக்கப்படுகிறது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6.20 மணிக்கு விருதுநகரிலிருந்து புறப்படும் ெரயில் காலை 9.35 மணி அளவில் காரைக்குடி சென்றடைகிறது. அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு விருதுநகர் வருகிறது. விருதுநகர் - காரைக்குடி இடையே உள்ள அனைத்து ெரயில்நிலையங்களிலும் இந்த ெரயில் நின்று செல்லும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ெரயில்இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story