சென்னையில் மழை குறித்த புகார் அளிக்க ‘வாட்ஸ்-ஆப்’ எண்கள் - மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் மழை குறித்த புகார் அளிக்க ‘வாட்ஸ்-ஆப்’ எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 7-ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்து வந்தது. மாநகராட்சியின் சார்பில் மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பருவமழை குறித்து கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறவும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுபாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும், 9445477205 என்ற வாட்ஸ்-அப் எண்ணும் செயல்பட்டு வருகிறது. மேலும், 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்கின்ற உதவி எண் தற்பொழுது மழை, வெள்ளத்தின் காரணமாக 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும், 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற 3 ‘வாட்ஸ்-அப்’ எண்கள் கூடுதலாக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த ‘வாட்ஸ்-அப்’ எண்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கம், மரக்கிளைகள் அகற்றுதல் மற்றும் இதரப் புகார்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story