கானத்தூரில் பெண் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் கைது
கானத்தூரில் பெண் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பம் பகுதியில் வசிப்பவர் பதர்ஜஹான் (வயது 45). இவருடைய கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருடைய மகள் அமெரிக்காவில் படித்து வருகிறார்.
இந்த நிலையில். பதர்ஜஹான் வீட்டில் வைத்திருந்த ரூ.40 லட்சம் திடீரென மாயமானது குறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்தார். கானத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலகுமரன் தலைமையில் தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாகரன், ஐசக் டேனியல் ஆகியோர் குறித்து விவரங்களை சேகரித்தனர்.
புதுச்சேரியில் பதுங்கி இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் திருநின்றவூர், அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த பிரபாகரன், ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஐசக் டேனியல் (23) என தெரியவந்தது.
இருவரும் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், பணத்தை திருடி தாங்கள் வசித்து வந்த காரப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.27 லட்சத்து 12 ஆயிரத்தை கைப்பற்றினர்.
Related Tags :
Next Story