வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாணம்


வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 10 Nov 2021 9:48 PM IST (Updated: 10 Nov 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாணம்

உடுமலை
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்தசஷ்டி விழா நிறைவுநாளான நேற்று வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணம்
உடுமலையில் பிரசித்திபெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசாமி சன்னதியில் உள்ள வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை ஆகியவை நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது.
இதைத்தொடர்ந்து கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று  காலை ஹோமம் நடந்தது. பின்னர்வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆர்.சீனிவாசசம்பத், தக்கார் வி.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பழனியாண்டவர் நகர்
உடுமலை பழனியாண்டவர் நகரில் உள்ள  சித்தி விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்து வந்தது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாலமுருகன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி 300 பேருக்கு அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் என்.ரவிச்சந்திரன், செயலாளர் ஏ.ஈஸ்வரன், பொருளாளர் எம்.குணசேகரன், மற்றும் கே.சண்முகம், சி.வெங்கிடுசாமி உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story